'எதுக்கு இந்த சிங்கப்பெண் அதிரடிப்படை?; தனிமனித ஒழுக்கம்..? சரி விடுங்க..' என்று முதல்வரை கிண்டலித்து விமர்சித்துள்ள அதிமுக ஐடி விங்..!
The AIADMK IT Wing has criticized Vijay citing the Singappen commando force initiative
பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம், சட்டம் - ஒழுங்கு ஆகிய மூன்றும் ஒன்று ஒன்று தொடர்புடையது என்றும், பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் சட்டம் - ஒழுங்கு மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை, இதில் சமூக ஒழுங்கும், தனிமனித கட்டுப்பாடும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அதாவது தனிமனிதன் ஒழுங்காக கட்டுப்பாட்டோடு இருந்தாலே சமூகமும் நன்றாக மாறும் என்று சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழாவில் முதல்வர் விஜய் பேசியிருந்தார்.
அத்துடன் போதை பொருளை உடனடியாக தடுக்க முடியாது என கூறியிருந்த நிலையில், ''அப்புறம் எதுக்கு ப்ரோ இந்த சிங்கப்பெண் அதிரடிப்படை?'' என அதிமுக ஐ.டி. விங் அமிலங்க முதல்வரை கிண்டலடித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இந்தத் திட்டத்திற்கும், முதலமைச்சர் விஜய் பேசியதையும் அதிமுக ஐ.டி. விங் கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;

''கஷ்டபட்டு தளம் அமைத்து அஸ்திவாரம் போட்டு வீட்டைக் கட்டி எழுப்புவது ஒன்று, அடுத்தவர் கட்டி முடித்த வீட்டிற்கு பால் காய்ச்சுவது மற்றொன்று. ஆனால், அடுத்தவர் வீட்டுக்கு வாடகைக்கு வந்துவிட்டு, அதை சொந்த வீடு போல ஸ்டிக்கர் ஒட்டுவது என்பது இன்னும் புதுமையானது.
இதைத் தான் இன்று சிங்கப்பெண் சிறப்புப்படை என்ற பெயரில் செய்துள்ளார் ப்ரோ..!!
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் கமாண்டோ படை, அம்மா Patrol என அஇஅதிமுக ஆட்சி பெண்களைக் காக்க, பெண்களை முன்னேற்ற கொண்டு வந்த திட்டங்களை கலந்து அடித்து சிங்கப்பெண் படை எனும் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
யூனிபார்ம் மாற்றி, Drone ஷாட் வைத்ததில் மட்டும் தான் உங்க சினிமா Expertise தெரிந்தது (அந்த AI வீடியோ பிழை இல்லாமல் ஒழுங்கா பண்ணியிருக்கலாம் Though…)
ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வில் பேசிய இன்றைய முதலமைச்சர், இரண்டு முறை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து ரத்து செய்தது ஏன் என்பதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
மேலும், போதைப்பொருளை ஒழித்தால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழியும் எனவும், போதைப்பொருளை ஒழிப்பது கடினம் எனவும் கூறியுள்ளார். அப்புறம் எதுக்கு ப்ரோ இந்த சிங்கப்பெண் அதிரடிப்படை?
பெண்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு மூலக் காரணம் என நீங்களே கூறும் காரணத்தை ஒழிக்காமல், பல பெண் காவலர்கள் உள்ளடக்கிய ஒரு சிறப்பு படையை எதற்கு பணித்துள்ளீர்கள்? நீங்கள் அடுத்த சில நாட்களுக்கு Reels போட்டு Promotion செய்ய கண்ணியமிகு காவல் படையின் பெண் சிங்கங்கள் என்ன பகடையா?
எதற்காக இன்றைய முதல்வர் போதைப்பொருளை ஒழிக்க முடியாது என மறைமுகமாக தொடர்ந்து கூறி வருகிறார்? ஒரு நல்ல முதல்வர் என்றால், மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களைப் போல போதைப்பொருளை 90 நாட்களில் ஒழித்துக் கட்டுவேன் எனப் பேச வேண்டும்.
அதை விடுத்து, என்னால் முடிந்ததை நான் செய்கிறேன், தனிமனித ஒழுக்கம் முக்கியம் என பேசுவதெல்லாம் அப்பட்டமான தட்டிக் கழிக்கும் அரசியல் என்று பார்க்காமல் வேறெப்படி பார்ப்பது?
Accountability துளியும் இல்லாத, Responsibility எடுத்துக்கொள்ள மனமற்ற, Reality-க்கு முற்றிலும் அப்பாற்பட்ட, Reels ஆட்சி தானே நடத்துறீங்க ப்ரோ? Bro… This is seriously Wrong bro!!! (பி.கு. : தனிமனித ஒழுக்கம்…. சரி விடுங்க!) பொய்க்கால் குதிரை அரசு'' என கடுமையாக கிண்டலடித்து விமர்சித்துள்ளது.
English Summary
The AIADMK IT Wing has criticized Vijay citing the Singappen commando force initiative