திருத்தணியில் தவெக வேட்பாளர் தனியே பிரச்சாரம்! புறக்கணித்த நிர்வாகிகள்! தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்!
Thaveka candidate campaigns alone in Thirutani The administrators ignored him This is the reason why he was left alone
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் “யாருடனும் கூட்டணி இல்லை, தனித்துதான் போட்டி” என்று அறிவித்திருந்தார். ஆனால், அந்த ‘தனித்து’ என்ற வார்த்தை தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருத்தணி தொகுதியில் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் சத்தியகுமார், பிரச்சாரத்திற்கு தனியாக செல்வது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “கூட்டணி இல்லாமல் தனித்து நிற்பது சரி... ஆனால் வேட்பாளரே தனியாக பிரச்சாரம் செய்வதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
தவெக கட்சியில் வேட்பாளர்கள் மூன்று வகையாக உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர் மன்றத்திலிருந்து வந்தவர்கள், மற்ற கட்சிகளில் இருந்து இணைந்தவர்கள், மற்றும் நேரடி தொடர்புகளின் மூலம் சீட் பெற்றவர்கள். இதில், சிலருக்கு பணபலமும், ஆதரவாளர்களும் குறைவாக இருப்பதால், பிரச்சாரம் மந்தமாக உள்ளது.
திருத்தணியில் ஏற்பட்டுள்ள இந்த நிலை குறித்து கட்சி நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, வேட்பாளர் சத்தியகுமார் வழக்கமான பிரச்சார முறைகளை ஏற்க மறுத்துள்ளார்.
“பிரச்சார வாகனம் வேண்டாம், சைக்கிளில் போகலாம், அதிக பேர் தேவையில்லை, 13 பேர் இருந்தால் போதும்” என அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், “நான் வீடியோ மூலம் வாக்குகளை பெற்றுவிடுவேன், யாரும் வர வேண்டாம்” என்று கூறியதுடன், சில நிர்வாகிகளை அவதூறாக பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கட்சிக்குள் அதிருப்தி உருவாகி, முழு ஆதரவு வழங்க மாட்டோம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தவெக கட்சியின் அடிப்படை அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பில் கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்தல் நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த உள் பிரச்சினை, அந்த தொகுதியில் கட்சியின் செயல்திறனை பாதிக்குமா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகியுள்ளது.
English Summary
Thaveka candidate campaigns alone in Thirutani The administrators ignored him This is the reason why he was left alone