ஜூன் 12 முதல் தஞ்சையில் புதிய சுங்கச்சாவடி! ரூ.105 முதல் ரூ.560 வரை கட்டணம்!
Thanjai New TollGate
தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட மானம்பாடி சுங்கச்சாவடி ஜூன் 12-ம் தேதி முதல் செயல்பட தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ளது.
தஞ்சை–விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு மற்றும் சோழபுரம் இடையே அமைந்துள்ள மானம்பாடியில் இந்த சுங்கச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது. தொடங்க உள்ள சேவையை முன்னிட்டு, விதிமுறைகளுடன் கட்டண விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
வாகன வகைப்படி சுங்கக் கட்டண விவரம்:
கார் / ஜீப் / வேன்
ஒருமுறை பயணம்: ரூ.105
இருமுறை (அதே நாளில்): ரூ.160
இலகுரக வணிக வாகனம் / சிறிய சரக்கு வாகனம் / மினி பஸ்
ஒருமுறை: ரூ.170
இருமுறை: ரூ.255
தனியார் பேருந்துகள் / டிரக் - ஒருமுறை பயணம்: ரூ.360
போக்லைன், எக்ஸ்கவேட்டர் போன்ற கனரக இயந்திர வாகனங்கள் - ஒருமுறை கட்டணம்: ரூ.560
இந்த சுங்கச்சாவடி செயல்பாட்டிற்கு வரும் நாளில், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வழித்தட கட்டணங்களை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.