சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடி புகழ் பாடும் கூட்டணி கட்சி.!  - Seithipunal
Seithipunal


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் துணிச்சலான நடவடிக்கை என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப் பள்ளிகளில் படித்த தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5. சதவீத இட ஒதுக்கீடு வழங்கத் தமிழக அரசு அரசாணை வழங்கியிருப்பதை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தாமதித்த நிலையில், சமூக நீதியைக் காப்பாற்றும் வகையில் தமிழக அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதைத் துணிச்சலான நடவடிக்கை எனப் பாராட்டுகிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thami mun ansari speech about tn govt announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->