தைப்பூசத் திருநாள்...! தமிழர்களுக்கு விஜய்யின் இனிய வாழ்த்து செய்தி...!
Thaipusam festival Vijay heartfelt wishes Tamil
தமிழகம் முழுவதும் இன்று தைப்பூசத் திருவிழா ஆனந்தக் களிப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே முருகன் கோவில்களில் பக்தர்கள் திரண்டெழுந்து, நீண்ட வரிசைகளில் நின்று ‘வேல் முருகா’ என பக்தி முழக்கங்களுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவில்கள் முழுவதும் பக்தி பரவசம் சூழ, பால் குடங்கள், காவடி, அன்னதானம் போன்ற வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த புனித நாளையொட்டி, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில்,“தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அருள் உலகெங்கும் வாழும் தமிழர் இல்லங்களில் என்றும் நிலைக்கட்டும்.
வளம், மகிழ்ச்சி, வெற்றி நிரம்பிய வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்கட்டும். இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!” என மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
English Summary
Thaipusam festival Vijay heartfelt wishes Tamil