தமிழக சட்டமன்ற தேர்தல்; 21 முதல் 24 மற்றும் மே 02 முதல் 04-ஆம் தேதி வரை வெடிபொருட்கள் விற்பனை சேமிப்பு கிடங்குகள் தற்காலிக மூடல்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தளுக்கு இன்னும் 10 நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், மாநிலம் முழுவதும் வெடிபொருட்கள் விற்பனை மற்றும் சேமிப்பு தொடர்பான கடைகள் மற்றும் கிடங்குகள் தற்காலிகமாக மூட அரசாணை எண்:454 உள்ள (காவல் XIII) துறை நாள்:18.03.2026 ன்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்குப்பதிவு நடைபெறும் காலமான வரும் 21-ஆம் முதல் 24-ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 04-ஆம் தேதியை முன்னிட்டு, 02 முதல் 04-ஆம் தேதி வரையிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடிபொருட்கள் விற்பனை மற்றும் சேமிப்பு தொடர்பான கடைகள் மற்றும் கிடங்குகள் தற்காலிகமாக மூடவேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும், மேற்படி உத்தரவினை மீறுபவர்கள் மீது காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Temporary Closure of Explosives Sales Outlets and Storage Warehouses from the 21st to the 24th and from May 2nd to 4th


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->