2029-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா; ராகுல் காந்தி மற்றும் அனைத்துக்கட்சி எம்.பி-க்களுக்கு அவசர கடிதம் எழுதியுள்ள பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


'மகளிர் இடஒதுக்கீடு மசோதா' இந்திய அரசியலில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சமோசாதவை உடனடியாகச் செயல்படுத்தும் வகையில், இந்த மசோதாவிற்குப் பூரண ஆதரவு அளிக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

''மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அதன் முழுமையான வீரியத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். 2023-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டது.

இருப்பினும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப் பிறகு 2034-ல் தான் இது நடைமுறைக்கு வரும் என்ற சூழல் இருந்தது. ஆனால், தற்போது கொண்டு வரப்படும் திருத்தத்தின் மூலம் 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த முக்கியமான மசோதாவை விவாதித்து நிறைவேற்றுவதற்காக, ஏப்ரல் 16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது. இந்தத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மக்களவை இடங்களின் எண்ணிக்கை 816-ஆக உயர்த்தப்படும் என்றும், அதில் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. "பெண்கள் மீதான நமது பொறுப்பை வெளிப்படுத்தும் தருணம் இது" என்று பிரதமர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் இந்தக் கடிதத்திற்குப் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பதிலளித்து கூறியதாவது; மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவான ஆலோசனைகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், அவசரமாக இந்தத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மகளிர் இடஒதுக்கீடு நீண்ட காலமாகக் காத்திருப்பில் உள்ள ஒரு கோரிக்கை என்பதால், இந்தச் சிறப்பு அமர்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi has written an urgent letter to Rahul Gandhi and MPs from all parties regarding the Womens Reservation Bill


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->