ஆட்சியமைக்க தயாரான சிவசேனா.! தற்காலிக சபாநாயகராக நியமனம்.! யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர  பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அஜித் பவாரை துணை முதல்வராகவும் கடந்த 23 ஆம் மகாராஷ்டிரா ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, காங்கிரஸ் உள்ளிட்ட 3 கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தன. 

இதையடுத்து, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெருபான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில், மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக துணை முதலமைச்சர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். இதையடுத்து முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

இதனைத்தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ காளிதாஸ் கொலம்ப்கர் தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தற்காலிக சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் பதவியேற்றார் அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

temporary assembly speaker elected in maharastra


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->