கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்..  தெலுங்கு காமெடி நடிகர் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது. அதே போல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.

அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். இதில் கன்னட முன்னணி நடிகரான கிச்சா சுதீப் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதேபோல் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி காங்கிரஸில் இணைந்துள்ள நிலையில் அவர் காங்கிரசுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பிரபல தெலுங்கு காமெடி நடிகரான பிரம்மானந்தம் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் தெலுங்கு மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியான சிக்பலாபூர் பிரச்சாரம் செய்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telungu comedy actor brammaanantham election campaign in Karnataka


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->