"தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை"..!! கர்நாடகாவில் ஒலித்த குரல்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. தற்பொழுது கர்நாடகாவை ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக மாநில தேர்தல் இணைப் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதி வாரியாக கவனம் செலுத்தி பாஜகவினர் வியூகம் வகுத்து வருகின்றனர். இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை கர்நாடகாவில் முகமிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக எம்.பி.,யும் இளைஞர் அணி தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்பொழுது பேசிய அவர் "மைசூர் மாவட்டம் வருணா மற்றும் சாம்ராஜ் நகர் தொகுதிகளில் சோமண்ணா என்ற அஸ்திரத்தை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளார். 

இரண்டு தொகுதிகளிலும் சோமண்ணா வெற்றி பெறுவார். மைசூர் சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் உள்ள 8க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். பெங்களூர் விஜயநகர் மற்றும் கோவிந்தராஜ் நகர் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்"என பேசி அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் "தமிழ்நாடு வருங்கால முதல்வர் இனி உங்களிடம் விளக்குவார்" என கூறியவாறே மைக்கை வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை "கர்நாடக அரசியல் பிம்பத்தை சோமண்ணா மாற்ற உள்ளார். சர்ஜிகல் ஸ்டைக் மாற்ற அவர் தயாராக உள்ளார். சாம்ராஜ்நகர், வருணா தொகுதியில் மாற்றம் நிகழப் போகிறது." என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கையுடன் பேசினார். 

தேஜஸ்வி சூரியா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வருங்கால தமிழக முதல்வர் எனக் கூறிய பொழுது அனைவரும் அண்ணாமலையை உற்று நோக்கினர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக நீடித்து வருவதாக தேசிய தலைவர்கள் கூறிவரும் நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவான குரல்கள் வலுத்து வருவது அதிமுக பாஜக கூட்டணியில் புகைச்சலை அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tejaswi Surya said that Annamalai is the future CM of TamilNadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->