எங்களுக்கு "சரிசமமானவர்களுக்கு தான் பதில்" சொல்ல முடியும்.! நிர்மலா சீதாராமனை சாடிய டி.ஆர் பாலு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் நேற்று எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் "கடந்த 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த கட்சி திமுக.

அவரை அவமானப்படுத்திவிட்டு எல்லாரும் உட்கார்ந்து சிரித்தார்கள். அன்று சட்டப்பேரவையில் ஒரு உறுதிமொழி எடுத்து விட்டு வெளியேறினார். நான் மீண்டும் முதல்வராக தான் சட்டப்பேரவைக்கு வருவேன் என சபதம் எடுத்தார்.

அதன் பிறகு சட்டப்பேருக்கு வராத அவர் 2 ஆண்டுகள் கழித்து முதல்வராக சட்டப்பேரவைக்கு வந்தார். அன்று ஆளுங்கட்சியாக அமர்ந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவரின் புடவையை பிடித்து இழுத்து விட்டு இன்று திரௌபதியை குறித்து பேசுவதை என்னால் ஏற்க முடியவில்லை" என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலுவிடம் நிர்மலா சீதாராமனின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் "நான் 67 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். இவர்களெல்லாம் முந்தாநாள் வந்து மந்திரியாகி விட்டால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?

நியாயம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா. நாங்கள் யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு சரிசமமாக இருக்கக்கூடியவர்களுக்கு மட்டுமே பதில் சொல்ல முடியும். ஒட்டுமொத்த மழைக்கால கூட்ட தொடரும் வீணாகப் போனது. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் உருப்படாத சட்டங்கள்" என கடுமையாக சாடியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TBBalu said that we can answer those who are equal to us


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->