#BREAKING || படைதிரட்டி வந்து ஆதரவை தெரிவித்த தமிழ்ச்செல்வன்... அடுத்தடுத்து அமர்க்களப்படும் ஆதரவாளர்கள்,! - Seithipunal
Seithipunal


வருகின்ற 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில், ஓபிஎஸ் ஒரு பக்கம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பொதுக்குழு கூட்டத்திற்கான நாள் நெருங்க.. நெருங்க.. எடப்பாடி கே பழனிசாமியின் கை இமயம் போல் ஓங்கி வருவதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி வருவது காலத்தின் கட்டாயம் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

எடப்பாடி கே பழனிசாமிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்கள் அறுபத்தி ஆறு மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி கே பழனிசாமி பக்கம் வந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து தனது ஆதரவை எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கையில் பூங்கொத்துடன் பேரணியாக படை போல் திரண்டு வந்திருந்தது, அங்கு கூடியிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியது.

முன்னதாக இன்று காலை மதுரை மாவட்ட அம்மா பேரவை சார்பில் இன்று எடப்பாடி பழனிசாமி இல்லம் நோக்கி பேரணியாக வந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்னதாக, ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக கருதப்பட்ட மாஃபா பாண்டியராஜன் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TAMILSELVAN SUPPORT TO EPS


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->