மே 04-ந் தேதி வரை கனவு காண்பார்கள்; ஆன்மீக தேடலுக்கு செல்லும் தவெக விஜய் ஷூட்டிங்கிற்கு இடம் தேட செல்வார்; தமிழிசை விமர்சனம்..!
Tamilisai criticizes TVK Vijay remarking that while he claims to be embarking on a spiritual quest he is actually setting out to scout for shooting locations
2026 தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் மே 04-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த தேர்தலில், முதன்முதலாக தேர்தலை சந்தித்திருக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும், தங்களுக்காக மக்களின் ஆதரவின் முடிவை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றனர்.
இன்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்ற தவெக தலைவர் விஜய் சிறப்பு பூஜையான சத்ரு சம்ஹார பூஜையில் கலந்துகொண்டு வேண்டுதல் செய்தார். விஜயின் இந்த நகர்வும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் விஜய் குறித்த கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளதாவது;
விஜய் நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால் குழந்தைகளை வைத்து பெற்றோர்களிடம் தனக்கு வாக்கு செலுத்த வேண்டும் எனச் சொல்வது தவறு. குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்ய கூடாது என்பது விதியாக உள்ளது. குழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை விதைக்க கூடாது. குழந்தைகள் படிக்க வேண்டும், எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும். கல்லூரியை தாண்டிய பின் வாக்களிப்பது சிந்திப்பது பரவாயில்லை. வாக்களிக்க ஒரு வயது இருக்கிறது. குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என்பதை விஜய் உணர வேண்டும்.
தேர்தலுக்கு முன்பாக எந்த அடையாளமும் காண்பிக்க மாட்டேன், தேர்தலுக்குப் பின்பு சில அடையாளங்களை அவர் காண்பிக்கிறார். ஆன்மீக பயணத்தை குற்றம் சொல்ல மாட்டேன், ஆன்மீக தேடலுக்கு செல்லும் தவெக விஜய் ஷூட்டிங்கிற்கு இடம் தேட செல்வார்.
200 தாண்டி விசில் போகும் என செங்கோட்டையன் சொல்வது விசில் சத்தம் போல் இல்லை. பாம் சத்தம் போல் இருக்கிறது. விசிலுக்கு என்று ஒரு சத்தம் இருக்கிறது. அதை தாண்டி போக முடியாது. 200 தாண்டுவது என பிர்மாண்டமான கனவு. செங்கோட்டையன் கோட்டை கட்டுவது எப்படிப்பட்ட கனவு என்று எல்லாருக்கும் தெரியும். கனவு காண அனைவருக்கும் உரிமை இருக்கிறது. நல்ல கனவு காணட்டும். மே 04-ந் தேதி வரை எண்ண எண்ண கனவு காண்பார்கள்.'' என தமிழிசை பேசியுள்ளார்.
English Summary
Tamilisai criticizes TVK Vijay remarking that while he claims to be embarking on a spiritual quest he is actually setting out to scout for shooting locations