த.வெ.க. 3-ம் ஆண்டில் காலடி! - ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே லட்சியம் என விஜய் உறுதி...! - Seithipunal
Seithipunal


த.வெ.க. மூன்றாம் ஆண்டுத் தொடக்கப் பெருவிழா: தலைவரின் சூளுரை
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, கட்சியின் தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு எழுச்சியூட்டும் வகையில் விடுத்துள்ள புதிய அறிக்கை:
என் நெஞ்சகத்தின் நீங்காச் சொந்தங்களுக்கு,
வணக்கம்.
நம் குருதியோட்டத்தில் கலந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம், இன்று தனது மூன்றாவது அகவையைத் தொடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளை வெறும் கால ஓட்டமாக மட்டும் பார்க்காமல், தடைகளைத் தகர்த்து, தர்க்கங்களை வென்று ஒரு அரசியல் பேரியக்கமாக உருமாறியிருக்கிறோம்.


நாம் அதிகாரத்தை எட்டும் முன்னரே, எளிய மக்களின் துயர்துடைக்கும் மக்கள் சக்தியாக மண்ணில் வேரூன்றிவிட்டோம். இதை இந்தத் தேசமும் அறியும், நேர்மைக் குணமுடைனோரும் அறிவர்.
ஒன்றை மட்டும் திமிராகக் கூறிக் கொள்கிறேன்:
வீண் சலனங்களைச் சுருட்டி எறிந்துவிட்டு, அமைதி பொதிந்த ஆழ்கடலாக த.வெ.க. வீற்றிருக்கிறது.
யாராலும் அசைக்க முடியாத, எல்லைகளற்ற பேரண்டமாக த.வெ.க. விரிந்து நிற்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக, சாமானியர்களின் அதிகார அரசியலை மீட்டெடுக்கும் வெற்றிப் போர்முரசாக த.வெ.க. அதிர்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் களம், தமிழக வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அரசியல் திருப்பத்தைச் சுமந்து நிற்கிறது. அந்தப் பெரும் மாற்றத்தின் அச்சாக நமது கழகம் மட்டுமே திகழ்கிறது என்பதுதான் சமகால உண்மை.
எனவே, இந்தக் களத்தை நமதாக்குவோம்! நுட்பமான வியூகங்களோடும், தீர்க்கமான முடிவுகளோடும் தேர்தல் களத்தைச் சந்திப்போம். மக்களின் பேராதரவுடன், பிளவுபடாத ஒற்றுமையோடு அணிவகுத்து, ஜனநாயகப் போரில் ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றி புதிய சகாப்தத்தைப் படைப்போம்.
நன்மைகள் பெருகட்டும். வெற்றி நமதே.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilaga Vetri Kazhagam enter 3rd year Vijay affirms that seizing political power ultimate goal


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->