தமிழக நீர்வளத்துறை செயலாளர் திடீர் மாற்றம்; புதிய செயலராக பிரசாந்த் மு.வடநரே நியமனம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மேகேதாட்டு அணை விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், துறை செயலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, நீர்வளத் துறையின் செயலராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சத்யபிரத சாஹூ மாற்றப்பட்டு, புதிய செயலராக பிரசாந்த் மு.வடநரே நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;

''நீர்வளத் துறை செயலராக இருந்த சத்யபிரத சாஹூ மாற்றப்பட்டு அவருக்கு பதில், ஊரக வளர்ச்சித் துறை செயலராக பணியாற்றி வரும் பிரசாந்த் மு.வடநரே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மறு உத்தரவு வரும் வரை பிரசாந்த் வடநரே ஊரக வளர்ச்சித் துறை செயலர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Water Resources Department Secretary changes abruptly


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->