தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மறைவு!...கழக தலைவர் விஜய் இரங்கல்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின்  முதல் மாநில மாநாடு இந்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில்  மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று  நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 4-ம் தேதி பூமி பூஜைக்கு பந்தல் கால் நாடும் பணி நடைபெற்றது.

தொடர்ந்து மாநாட்டிற்கு வரும் கட்சியின் தலைவர் விஜய், முதலில் 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்ற உள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மாநாட்டு மேடைக்கு செல்லும் வகையில் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய தார் சாலை அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில்தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில்,  தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil nadu vetri kazhaga executive passed away vijay condolence


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->