'தமிழ்நாடு நாள்'- ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்...!- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Tamil Nadu Day day when dream carried my heart for years came true Chief Minister MK Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டதாவது,"தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்!

ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.
அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி 'தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு' என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் #TamilNaduDay! " என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil Nadu Day day when dream carried my heart for years came true Chief Minister MK Stalin