தமிழக பட்ஜெட் 2026 -27; மீனவர்களுக்கான உதவித் தொகை ரூ.7,000 ஆக உயர்வு: 10,000 பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கப்படும்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்​ஜெட்​டை சட்டப்​பேரவையில் இன்று நிதியமைச்​சர் மரிய வில்​சன் தாக்​கல் செய்து உரை நிகழ்த்தினார். அதில் மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை, பால்வள துறை தொடர்பாக அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

அதன்படி, மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதன் மூலம், 193 லட்சம் பாரம்பரிய மீனவர் குடும்பங்கள் பயனடையும் எண்டு சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்து, நவீன பதப்படுத்தும் வசதிகள் கொண்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வாங்கும் மீனவர்களுக்கு வட்டி மானியம் வடிவிலான நிதியுதவி வழங்க ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 பால் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊரகப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஆண்டுதோறும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு இலவசக் கறவை மாடுகள் வழங்கப்படும் எனவும், இதற்காக ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு மொத்தமாக ரூ.4,880 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Budget 2026 announces increase in assistance to fishermen to Rs 7000


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->