அன்று நீட் வராது., வரவுடமாட்டோம்., இன்னிக்கு "செஸ்" பாட்டுக்கு ஆட்டம் - திமுக.,வை மறைமுகமாக போட்டு தாக்கிய தமிழ் நடிகை.!   - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தால், அரியலூரைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு மநீம ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

அனிதாவில் தொடங்கிய தற்கொலைகள் எவ்வளவு காலத்துக்கு தொடரப் போகின்றன? நீட் தேர்வை முன்வைத்து அரசியல் செய்யாமல், இதற்கு நிரந்தரத் தீர்வுகாண அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய  காலம் வந்துவிட்டது. இனியும் நம் கண்மணிகளின் உயிரை `நீட்' காவு வாங்குவதை வேடிக்கை  பார்க்கலாமா?" என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கிடையே, தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக திமுகவை தாக்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

"நீட் வராது., வரவுடமாட்டோம்னு சொல்லி சொல்லியே அன்னிக்கு அனிதாவுடைய உயிரை வாங்கியவங்க, அதே வாக்குறுதியை சொல்லி வோட்டு வாங்கினவங்க.

இப்போ neet பாட்டுக்கு நடந்துக்கிட்டு தான் இருக்கு, இவங்க பாட்டுக்கு  செஸ் பாட்டுக்கு ஆடிக்கிட்டு, அடுத்த மரணத்துல அரசியல் பண்ண போயாச்சு. என்ன மாடலோ" என்று திராவிட மாடலை கேள்வி கேட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamil actress say about neet issue dmk mkstalin dravida model


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->