கரூர் துயர சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய தவெகவினர் வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
Supreme Court to deliver verdict today in Thavekavinar case seeking CBI probe into Karur tragedy
கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்த போது செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டதில்,பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ'வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வக்கீல் யஷ் எஸ்.விஜய் உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்தார். அத்துடன், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், பாத்திமா பானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோரும் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரி சுஉச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பா.ஜனதா சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணியும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா அடங்கிய அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை செய்தது. அப்போது தமிழக அரசு தரப்பிலும், விஜய் தரப்பிலும் காரசார வாதம் நடைபெற்றது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) அளிக்கவுள்ளது.
English Summary
Supreme Court to deliver verdict today in Thavekavinar case seeking CBI probe into Karur tragedy