'தேர்தலில் முறைகேடு செய்து ஸ்டாலின் வெற்றிப்பெற்றார்': சைதை துரைசாமிக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு..?
Supreme Court orders Saidai Duraisamy to submit documents in case of Stalin election fraud
2011-இல் நடந்த தேர்தலில் சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதியில், முறைகேடு செய்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்று அதிமுகவின் அ.தி.மு.க.,வின் சைதை துரைசாமி குற்றம் சாட்டினார். அத்துடன் ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையினுள் இந்த வழக்கு தொடர்பில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி, சைதை துரைசாமிக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-இல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சைதை துரைசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதோடு, தேர்தலில் வெற்றி பெற முறைகேடுகளிலும் ஈடுபட்டார்' என, வாதிட்டார்.
அதை கேட்ட நீதிபதிகள், 'குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள்; வழக்கு தொடர்பாக ஆவணங்கள் எவை எவை..? அது தொடர்பான விபரங்கள் அடங்கிய குறிப்புகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்' என, உத்தர விட்டுள்ளதோடு, இந்த வழக்கு விசாரணையை நவம்பர் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
English Summary
Supreme Court orders Saidai Duraisamy to submit documents in case of Stalin election fraud