#BigBreaking | உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக சற்றுமுன் வழங்கப்பட்ட அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


உச்ச நீதிமன்ற நீதிபதி என்வி ரமணாவின் பணிக்காலத்தின் கடைசி நாள் இன்று. நேற்று பிரதமர் பாதுகாப்பு அத்துமீறல், பில்கிஸ் பானு வழக்கு, பெகாசஸ் வழக்கு, இலவசங்கள் தொடர்பான வழக்குகளை என்வி ரமணா வசிசரனை செய்தார்.

இதில், அரசியல் கட்சிகளின் இலவச அழைப்புகள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு/உத்தரவு வழங்கப்பட உள்ளது.

இந்த வழக்கை பொறுத்தவரை, இலவசங்கள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஏன் ஆலோசனைக் கூட்டம் நடத்தக்கூடாது, தேர்தல் வாக்குறுதி இலவசங்களால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தை எட்டாவிட்டால் இதில் எதுவும் செய்ய முடியாது போன்ற கருத்துக்களை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் முன்வைத்தது. 

மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை பாஜக, திமுக உள்ளிட்ட நாட்டின் பல அரசியல் கட்சிகளும் இதனை எதிர்நோக்கியுள்ளன்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக இன்று வழக்கின் விசாரணைகள், தீர்ப்புகள் நேரலையில் ஒளிபரப்பட்டுள்ளது 

இந்நிலையில், அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் இலவச திட்ட அறிவிப்புகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுக்கள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம் உதகரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court Order For Election Free Announce case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->