தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஊரகம், நகர்புறம் என இரு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளது. அவற்றில் 1.50 லட்சத்துக்கு மேற்பட்ட பதவிகள் உள்ளது. பல மாவட்டங்களில் பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், 10 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. 

அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடக்கவில்லை. மீதம் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே 2019 டிசம்பர் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் 2020 ஜனவரியில் பொறுப்பேற்றுக் கொண்டனர். விடுபட்ட உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்துவது பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தள்ளிக்கொண்டு சென்றது. 

சட்டப்பேரவை தேர்தல் உடன் புறநகர் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா  காரணமாக இந்த திட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் தள்ளி வைத்து விட்டது. தேர்தல் நடத்தப்படாததால், சிறப்பு அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளை  நிர்வகித்து வருகின்றனர். 

இந்நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court new order local body election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->