#Breaking: மீனவ பெண்மணி அவமதிப்பு விவகாரம்.! அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்.!  - Seithipunal
Seithipunal


வாணியகுடி பகுதியை சேர்ந்த செல்வம் என்ற மூதாட்டி, மீன் விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று மீன் விற்பனை செய்து முடித்து விட்டு, வீட்டுக்கு செல்ல வாணியகுடி அரசு பேருந்தில் ஏறியபோது, அவரின் உடலில் மீன் விற்ற துர்நாற்றம் வீசுவதாக கூறி, பேருந்தின் நடத்துநர் அவரை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டிக்கு பேருந்து நிலையத்தில் கத்திக் கூச்சலிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. அவரின் ஆத்திரத்துடன் கூடிய அந்தப் பேச்சை பார்க்கும் மக்கள் அனைவரும் பெரும் கொந்தளிப்புக்கு ஆளாகினர்.

ஒரு மீன் தொழில் செய்யும் ஒரு மூதாட்டியை, இப்படி துர்நாற்றம் வீசுவதாக சொல்லி கீழே இறக்கி விடுவது மிக கொடூரமான செயல்., அந்த நடத்துனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், "குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. 

மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்." என்று ட்வீட் போட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin warning about fisher women insulting case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->