3ஜி அரசியல்.! உதயநிதி முதல்வர் வேட்பாளர்.! முக ஸ்டாலின் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதையடுத்து, தமிழக அரசியல் காட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களையும் அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து விளாசி தள்ளினார்.

அதில் குறிப்பாக, "சோனியா காந்தி ராகுலை பிரதமராக்குவது குறித்து கவலைப்படுகிறார். ஸ்டாலின் உதயநிதியை முதல்வராக்குவது குறித்து கவலைப்படுகிறார். அவர்கள் ஊழல், பிரித்தாளும் அரசியலை பின்பற்றுகிறார்கள்.

 2ஜி, 3ஜி, 4ஜி என அனைத்து ஜி-களும் தமிழகத்தில் உள்ளன. 2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் இரண்டு தலைமுறை. 3ஜி என்றால் கருணாநிதி குடும்பத்தின் 3 தலைமுறை, 4ஜி நெருக்குடும்பத்தில் 4 தலைமுறை என்று அர்த்தம்" என்று திமுக-காங்கிரஸ் கட்சிகளின் குடும்ப அரசியலை போட்டு தாக்கினார்.

இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலினிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டாலின், பாஜக தான் ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது" என்று தெரிவித்து சென்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

STALIN SAY ABOUT AMITH SHA


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal