#BigBreaking: ஸ்ரீமதியின் தாயிடம் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. தாய் செல்வி கேட்ட அந்த ஒரு விஷயம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து CBCID விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் தற்போது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது தாய் செல்வியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். அந்த குற்றவாளி எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் தண்டனை நிச்சயம் கிடைக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தாயின் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கு கட்டாயம் நீதி கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஸ்ரீமதியின் தாய் செல்வி தான் முதல்வர் ஸ்டாலினிடம் பேசியதாக தெரிவித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் கணேசன் இருவரும் தன்னை நேரில் சந்தித்ததாகவும், அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனக்கு முதல்வர் ஸ்டாலினிடம் கால் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து ஸ்டாலினிடம் பேசியபோது, எங்கள் மனக்குமுறலை உங்களிடம் நேரில் வந்து கூற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், அதனை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு நீங்கள் என் சகோதரி என்னை எப்போது வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம் என்று அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Srimathi mother called m k Stalin


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->