எஸ்பி வேலுமணி வழக்கில் அதிரடி திருப்பம் - உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


சென்னை, கோவை மாநகராட்சிகளில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக புகார் எழுந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையே, ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தபின் எஸ்பி வேலுமணிக்கு எதிராக சென்னை மற்றும் கோவையில் தலா ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, சோதனையும் நடைபெற்றது. 

இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்பி வேலுமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இந்த வழக்கை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வே விசாரிக்கலாம் என்றும், மத்திய அரசு வழக்கறிஞான ராஜுவே ஆஜராகலாம் என உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளை நடைபெறும் என்று தெரிவித்து இருந்தனர். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறப்போர் இயக்கம் தரப்பு வழக்கறிஞர், 'தாங்கள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது' என்று தெரிவிக்க, இந்த வழக்கை எம்.பி., எம்எல்ஏக்களுக்கான எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு மாற்றுவதாக பொறுப்பு தலைமை சென்னை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது, முதல் அமர்வு அல்லது இரண்டாவது அமர்வு விசாரிக்கலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று எஸ்பி வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், எம்.பி., எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SP VELUMANI CASE CHANGE HC ORDER


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->