'சபாநாயகரே வெறுத்துப்போகும் அளவுக்கு சிலர் நடந்து கொள்கின்றனர்'...! - நாகரிகம் குறித்து தமிழிசை காட்டம்...!
Some people behave point hating Speaker Tamilisai Kattam civilization
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக சட்டசபையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் பேரவை விவாதங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம் குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார்.அப்போது அவர் கூறியதாவது,"நான் சிறுவயதில் இருந்தபோது எனது தந்தையுடன் சட்டமன்றத்துக்கு சென்று, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து பேரவை நிகழ்வுகளை பார்த்திருக்கிறேன்.

அப்போது முன்னாள் முதல்-அமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் எனது தந்தை குமரி அனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் சட்டமன்றத்தில் பங்கேற்ற காலம் அது.அந்த காலகட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற விவாதங்களை பார்ப்பதற்கே தனி ஆர்வம் இருந்தது.
சட்டமன்றம் என்பது நாகரிகமான விவாதங்கள் நடைபெறும் இடம்; அனுபவமும் அரசியல் பண்பும் கொண்ட தலைவர்கள் அமர்ந்திருக்கும் பேரவை என்ற மதிப்பு அப்போது இருந்தது.தற்போது தமிழக சட்டமன்றத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
ஆனால், சில உறுப்பினர்களின் செயல்பாடுகள் அவரையே வெறுப்படையும் அளவுக்கு அமைந்துவிடுகின்றன.தற்போது சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், பொதுமக்கள் மட்டுமின்றி இளைஞர்களும் அதிகளவில் பேரவை நடவடிக்கைகளை கவனித்து வருகின்றனர்.
இது வரவேற்கத்தக்க மாற்றமாகும்.எனவே, சட்டமன்றத்தில் மீண்டும் நாகரிகமான, ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும். பேரவையின் நீண்டகால மரபுகளும் மாண்பும் பாதுகாக்கப்பட வேண்டும்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை நாகரிகமான முறையில் வெளிப்படுத்தி, தமிழக சட்டமன்றத்தை அனைவரும் மதிக்கும் உயர்ந்த அரசியல் மன்றமாக மாற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்".இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
English Summary
Some people behave point hating Speaker Tamilisai Kattam civilization