திமுக கூட்டத்தில் பெண்களிடையே திடீரென புகுந்த பாம்பு..தெறித்தோடிய மக்கள்! ஓணானை விரட்ட சொன்ன ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


அதிமுகவை புறக்கணிக்கிறோம் என்று திமுக நடத்தும், திமுக கிராமசபை கூட்டத்தில் இன்று திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மு க ஸ்டாலின் நன்னிலம் தொகுதியில் அவளிநல்லூரில் பிரச்சாரம் செய்தார். 

அங்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போது, பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் பாம்பு ஒன்று வந்துவிட்டது. இதனை பார்த்து அலறியடித்து ஓடிய பெண்களிடம், ஓணான் வந்துவிட்டதாக ஸ்டாலின் கூறி அமர கூறினார். 

ஆனால் அதன் பின்னர் அது விஷமற்ற தண்ணீர் பாம்பு என தெரியவந்தது. இதையடுத்து பாதுகாவலர்கள் அந்த பாம்பை அடித்துக் கொன்று அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. கூட்டத்தின் நடுவே பெண்கள் பகுதியில் பாம்பு புகுந்தது சிறிது நேரம் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

snake comes to dmk meeting in thiruvarur


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->