'பாஜக மறைமுகமாக அரசியலமைப்பை திருத்த முயற்சி செய்கிறது'; ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு..!
Revanth Reddy alleged that the BJP is indirectly trying to amend the Constitution
தெலுங்கானாவில் உள்ள கம்மம் என்ற இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய ரேவந்த் ரெட்டி கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும், ஜனநாயகத்தை நிலைநிறுத்த விரும்பினால், பிரதமர் மோடியை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி, பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால், அரசியலமைப்பை திருத்தும். இடஒதுக்கீட்டை ஒழிக்கும் என்றார். ஆனால், பாஜக-வால் 240 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. தற்போது, பாஜக மறைமுகமாக அரசியலமைப்பை திருத்த முயற்சி செய்து கொண்டு வருகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போது, அதன் ஒரு பகுதியாக SIR அமல்படுத்தப்பட்டு வருகிறது. எழை மக்களின் வாக்கு உரிமையை பறிக்க பாஜக SIR-ஐ பயன்படுத்தி வருகிறது என்றும், இதன் மூலம் நாட்டில் சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Revanth Reddy alleged that the BJP is indirectly trying to amend the Constitution