அதிர்ச்சி தகவல்!....தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்த நிர்மலா சீத்தாராமன்? - Seithipunal
Seithipunal


கோவை கொடிசியாவில்  தொழில் முனைவோர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவக நிர்வாக இயக்குநர் சீனிவாசன், இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. ஆனால் காரத்திற்கு 12 சதவீதம் இருக்கும் நிலையில், இந்த முரண்பாடு களையப்பட வேண்டும் என்று கூறினார். 

மேலும்  Bun-க்கு  ஜி.எ.ஸ்.டி இல்லாத நிலையில், அதற்கு உள் வைக்கும் க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி உள்ளது. இந்த நிலையில், க்ரீமை கொண்டு வா நானே வச்சிக்கிறேன் என்று வாடிக்கையாளர் கூறியதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் கடை நடத்த முடியல மேடம் என்றும், ஒரே மாதிரி வையுங்கள் என்று தந்து ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

இதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயல்பாட்டாளர் சுந்தரராஜன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில், 
இது தமிழ்நாட்டின் மாண்பை குறைக்கும் செயல்மட்டுமல்ல, தமிழ் தொழில்முனைவோரின் மாண்பை அழிக்கும் செயல் என்றும், கடவுளாக இருந்தால்கூட "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதாடிய மண் இந்த மண்.

இந்த மண்ணின் உயிர்நாடியே அதிகாரத்தை கேள்வி கேட்பதுதான் என்று குறிப்பிட்டுள்ள அவர், 
கொங்கு பெருமை பேசுவோர் இப்படி மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டதற்கு என்ன எதிர்வினை என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அன்னப்பூர்னா சீனிவாசன் நீங்கள் மன்னிப்பு கேட்டு இருக்கக்கூடாது என்று கூறியுள்ள அவர், நீங்கள் சொல்லிய அல்லது கேட்ட எதுவும் தவறு கிடையாது. மன்னிப்பு கேட்டதுதான் தவறு என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shocking information Nirmala Sitharaman made the businessman apologize


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->