திமுகவின் நட்பு உடைந்தது.! ஸ்டாலினுக்கு எதிராக வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முக ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய உள்ளோம் என்று, சிவசேனா கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்துக்களை மனம் நோகடித்த திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில், ஸ்டாலினுக்கு வாக்களிக்க கூடாது வீடு, வீடாக பிரச்சாரம் செய்வோம் என, சிவசேனா கட்சியின் தமிழக தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது, 

"இந்து கடவுள்களை தொடர்ந்து விமர்சனம் செய்து, இந்துக்களின் மனதை நோகடித்த மு.க.ஸ்டாலின் பகிரங்கமன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை எனில் வரும் தேர்தலில் மு.க.ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக வீடு, வீடாக பிரச்சாரம் செய்வோம்.

வரும் தேர்தலில் திமுக கூட்டணி வைக்க வேண்டாம் என்று கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளோம். ஆன்மிகம், தெய்வீகம், இந்துத்துவா கொள்கை கொண்ட ஒருமித்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைத்து வரும் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு தினத்தில் அறிவிப்போம்." என்று ஜி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்து தெரிவித்து நட்பு பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SHIVSENA against mk stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal