இன்றிரவு 7 மணிக்கு முக்கிய நிகழ்வை அறிவித்த சிவசேனா, பரபரப்பில் மகாராஷ்டிரா அரசியல்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கின் விசாரணையில் இன்று நடைபெற்றது, அதில் மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த விவகாரத்தில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 24 மணிநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில் 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.

இதையடுத்து, பாஜக தரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து தெரிவிக்க 2 அல்லது 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என உடச்சநீதிமன்றத்தில் கோரிக்கை  விடுத்திருந்தது.

இந்தநிலையில், மும்பை ஆளுநர் மாளிகையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று கட்சிகளை சேர்ந்த 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து தற்போதைய அரசுக்கு போதிய பெருபான்மை இல்லாததால் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என சிவசேனா கோரிக்கை விடுத்தது. 

இதனைத்தொடர்ந்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 162 எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு ஈடுபட உள்ளனர். மும்பையில் உள்ள ஹாயத் ஹோட்டலில் இரவு 7 மணிக்கு 162 எம்.எல்.ஏக்களும் ஒரே இடத்தில கூட உள்ளனர். 

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மூன்று கட்சிகளுக்கும் பெருபான்மை இருப்பதை நிரூபிக்க இத்தகைய முடிவு என சிவசேனா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shiv sena and his alliance mla in one place


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->