60 சொத்து ஆவணங்கள் யாருடையது.? போட்டுடைத்த செந்தில் பாலாஜி.! வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 3வது நாளாக அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடங்கியுள்ளது. வழக்கம்போல மூன்று அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். சுழற்சி முறையில் 3 அதிகாரிகள் ஒரு நாளைக்கு 50 கேள்விகள் விதம் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்க உள்ளனர்.

நேற்று நடைபெற்ற விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளில் ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் நேரடியாக பதில் அளித்துள்ளதாகவும், கரூர் மாவட்டத்தின் 9 இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை போது கைப்பற்றப்பட்ட 60 சொத்து ஆவணங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா வங்கி கணக்கில் சட்டவிரோதமாக 1.18 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடைபெற்றது குறித்து ஏற்கனவே வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் எங்கிருந்து பண பரிமாற்றம் செய்யப்பட்டது, எதற்காக பண பரிமாற்றம் செய்யப்பட்டது, வங்கி கணக்கில் செலுத்தியது யார் போன்ற கேள்விகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

அமலாக்கத்துறை எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அளிக்கும் பதிலை வீடியோ பதிவு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதே போன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SenthilBalaji answered dnot know about seized property documents


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->