3வது முறையாக... "ஆவணங்களை திருத்தி இருக்காங்க".. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல்.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 2 முறை ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி நடையாக நடந்தது.  உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்த போது மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் பெற முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் 3வது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை பிரதானமாக குறிப்பிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி வரும் ஜனவரி 8ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அன்றைய தினத்திற்க்கே ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji filed bail petition for 3rd time


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->