பிறர் முதுகில் சவாரி செய்யாமல், தனது காலில் தானே நின்று முன்னேற வேண்டும் - செங்கோட்டையன் பேட்டி! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அ.தி.மு.க. உட்கட்டமைப்பில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டார். தொடர்ந்து கட்சிக்காக உழைத்த பலருக்கும் இன்று எந்த வகையிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

எடப்பாடி பழனிசாமி, 45 வயதிற்குட்பட்டவர்களையே பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும் என்று கூறியதை நினைவூட்டிய அவர், இது பல நிர்வாகிகளை புறக்கணிக்கும் நடவடிக்கையாக உள்ளது. தன்னைச் சுற்றியுள்ளவர்களை பலவீனப்படுத்தும் சூழல் உருவாக்கப்பட்டால், அந்த குழுவே முழுமையாக பலவீனமடைந்து விடும் என்று அவர் எச்சரித்தார்.

நிர்வாகிகளை தொடர்ந்து நீக்கிக் கொண்டே சென்றால், முழு நிலவு தேய்ந்து இறுதியில் அமாவாசையாக மாறுவது போல அ.தி.மு.க.யும் பலம் இழக்க நேரிடும். கட்சி வலிமை பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தால், எடப்பாடி பழனிசாமி நேரடியாக தன்னுடன் பேசி இருக்க வேண்டும் என்றார்.

சட்டமன்றத்தில் தன்னைத் தொடர்ந்து பின்புற இருக்கையில் இருந்தபோதும், எடப்பாடி பழனிசாமி பேச தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.

அ.தி.மு.க.வின் பலத்தை உணராது, அதிமுக கூட்டத்தில் த.வெ.க. கொடி பறந்தது தொடர்பாக இபிஎஸ் கூறிய கருத்துகளும் தேவையற்றவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒருவர் முன்னேற வேண்டும் என்றால், பிறர் முதுகை நம்பி அல்ல, தனது காலில் தானே நின்று முன்னேற வேண்டும் என செங்கோட்டையன் தெளிவாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sengottaiyan vs ADMK Edappadi Palaniswami OPS BJP TTV


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->