'பீஹாரில் ரூ.10 ஆயிரம் போல தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கொடுக்க வாய்ப்புள்ளது'; சீமான் ஆரூடம்..! - Seithipunal
Seithipunal


பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்து மோடி வெற்றி பெற்று விட்டார். அதேபோன்று தமிழகத்திலும் அதுபோன்று ரூ.15 ஆயிரம் கொடுக்க வாய்ப்பு உள்ளது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இதற்காக தமிழகத்தில் உள்ள அம்மாக்களிடம் எல்லாம் வங்கியில் கணக்கு ஆரம்பித்து வைத்துக் கொள் என்று சொல்ல வேண்டும் என நிருபர்களிடம் சீமான் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பல காலமாக போலி வாக்காளர்கள் உள்ளனர். ஏதோ இப்போது மட்டும் போலி வாக்காளர்கள் உள்ளது போல் எஸ்ஐஆர் பணிகளை செய்வது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

அத்துடன், பீஹாரை போல் தமிழகத்திலும் தங்களுக்கு வாக்களிக்காத ஓட்டுகளை நீக்க முயற்சி செய்கிறார்கள் என்றும் ஒரு வீட்டின் வரவேற்பரையில் என் படம் இருந்தால் அந்த வீட்டில் இருக்குமா..? இதேபோல் தம்பி விஜய்யின் படம் இருந்தாலும் அந்த வீட்டில் ஓட்டு இருக்காது. நீக்கி விடுவார்கள்.

எஸ்ஐஆர் பணிகளுகாக திமுகவினர் உடன் செல்லும்போது ஒரு வீட்டில் ஜெயலலிதா படமோ அல்லது எடப்பாடி பழனிசாமி படமோ இருந்தால் அங்கும் ஓட்டு இருக்குமா..? பாஜக செல்லும் போது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வீட்டில் அவர்களுக்கு ஓட்டு இருக்குமா..? என்று பேசியுள்ளார்.

மேலும், இப்பொழுது பிரதமர் மோடி பீஹாரில் ரூ.10,000 போட்டார் இல்லையா..? அதேப்போன்று தமிழகத்திலும் (திமுக அரசு)  ரூ.15,000 கூட போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் நமது அம்மாக்களிடம் எல்லாம் வங்கியில் கணக்கு ஆரம்பித்து வைத்துக் கொள் என்று சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதாவது, பீஹார் பார்முலாவை பின்பற்றி, அவர்களை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு கொடுக்க வேண்டியதுதானே..? ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இன்னும் ஒரு ரெண்டு லட்சம் கோடியை கடனாக்கி விட்டு போக வேண்டியது தானே? என்று சீமான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman says that it is possible to pay Rs15000 in Tamil Nadu as opposed to Rs10000 in Bihar


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->