2026ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் - சீமான்!
Seeman Says NTK Will Reign in 2026 in TamilNadu
தமிழ் தேசியம் என்ற கருத்தை முன்வைத்து இயக்குனர் சீமானால் தொடங்கப்பட்டது நாம் தமிழர் கட்சி. 2016ம் ஆண்டில் தான் இக்கட்சி முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்டது. அரசியல் நெருக்கடி, கட்சி சின்னம் பறிப்பு என்று பல போராட்டங்களுக்குப் பிறகு இன்று நாதக ஒரு மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, " சின்னம் பறிப்பு, அரசியல் நெருக்கடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட கடும் நெருக்கடிகளை தாண்டி நாம் தமிழர் கட்சி இன்று மாநில கட்சி அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது.
வெறும் எட்டே ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது அரசியல் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சி. தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிட்ட நாதக, 8.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

பணபலம், அதிகார துஷ்பிரயோகம், மத்திய மாநில அரசுகளின் மிரட்டல் இவை எல்லாவற்றையும் கடந்து, தனித்து போட்டியிட்டு இத்தனை சதவீத வாக்குகளை பெற்று மாநிலக் கட்சியாக உருவெடுத்திருப்பது சாதாரணமல்ல.
இன்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற நாம் தமிழர் கட்சி 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வென்று ஆட்சியைப் பிடிக்கும். இதற்கான உறுதியை நான் அளிக்கிறேன். மேலும் மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், கடுமையாக உழைத்த தம்பி, தங்கைகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சீமான் கூறியுள்ளார்.
English Summary
Seeman Says NTK Will Reign in 2026 in TamilNadu