இது மரணம் அல்ல.. சட்டக் கொலை.. சீமான் ஆதங்கம்.!! - Seithipunal
Seithipunal


ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி சாந்தன் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சாந்தனின் மரணம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் " சாந்தன் 33 ஆண்டுகள் ஆக அரசியல் சட்ட போராட்ட பயணம் செய்தது மரணத்தை பார்க்கவா?

விடுதலை விடுதலை என்று போராடிய சாந்தனின் சாவை தான் இன்று பார்த்துள்ளோம். பொது சிறையில் இருந்து விடுதலையாகி கொடுஞ்சீரையில் அழைத்துள்ளார்கள் அதற்காகவா போராடினார்கள்? சாந்தனின் கடைசி விருப்பம் அவரது தாயை பார்க்க வேண்டும் என்பது அதைக் கூட நிறைவேற்ற வில்லை.

சாந்தனுடைய இறப்பு திரைப்படங்களில் வரக்கூடிய உச்சகட்ட காட்சியைப் போல உள்ளது. இன்று இரவு விடுதலையாக்கூடிய நிலையில் காலையில் உயிரிழந்துள்ளார். இது மரணம் அல்ல, சட்டக் கொலை. மீதி இருக்கும் மூன்று பேரையும் இந்த நிலைக்கு தள்ளாமல் அவரவர் விரும்பிய நாட்டுக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என சீமான் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman alleged Santhan death was judicial murder


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->