பணத்தை வாங்குங்க, விசிலை ஊதுங்க - சேலத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யின் அதிரடி பேச்சு! - Seithipunal
Seithipunal


சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான தேர்தல் வாக்குறுதிகளைத் தாண்டி, உணர்ச்சிப்பூர்வமாகவும் அதேசமயம் ஆளுங்கட்சியினரை மறைமுகமாகச் சாடும் வகையிலும் அவரது பேச்சு அமைந்தது.

அதில், "நான் உங்களிடம் ஓட்டு கேட்க மட்டும் வரவில்லை, என் மீதான அநீதிக்கு நீதி கேட்கவும் வந்துள்ளேன்," என்று தொடங்கிய அவர், தன்னை நேசிக்கும் மக்களுக்காக அரசியலுக்கு வந்ததில் என்ன தவறு இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அனுமதி மறுப்பு சர்ச்சை: மற்ற அரசியல் தலைவர்களுக்குத் தரப்படும் சுதந்திரம் தனக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது? மக்களைச் சந்திப்பதில் தனக்கு விதிக்கப்படும் தடைகள் ஜனநாயகத்திற்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டினார்.

பண அரசியல் குறித்து சாடல்: தேர்தலின் போது "வண்டி வண்டியாகப் பணம் கொண்டு வந்து கொட்டுவார்கள்" என்று குறிப்பிட்ட அவர், அது மக்களின் பணம் என்பதால் அதை வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆனால், "பணத்தை வாங்கிக்கொண்டு, அவர்களின் காதுகளில் விசிலை ஊதி (சரியான பாடம் புகட்டி) அனுப்புங்கள்" என அவர் கொடுத்த அறிவுரை தொண்டர்களிடையே பலத்த கைதட்டலைப் பெற்றது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeking Justice Not Just Votes Vijay s Power Packed Address in Salem


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->