''தமிழகத்தில் திமுக பெருச்சாளி ஊழல்தான் செய்தது; விஜய் ஊழல் ஒழிக்கப்பட்டு, நேர்மையான ஆட்சியை நடத்துகிறார்''; வைகோ பேட்டி..! - Seithipunal
Seithipunal


''தமிழகத்தில் இதுவரை தலைவிரித்தாடிய ஊழல் ஒழிக்கப்பட்டு, நேர்மையான ஆட்சியை விஜய் நடத்துகிறார். அவர் கொற்றம் வாழ்க.! திமுக பெருச்சாளி ஊழல்தான் செய்தது'' என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெறும் தனித்தமிழ் இயக்க விழாவில் வைகோ இன்று பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;

தனித்தமிழ் இயக்க விழாவில் முத்தமிழ் போற்றும் மூன்று காண்டங்கள் என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன். பிரெஞ்சு நாடு இன்றும் புதுச்சேரியை மதிக்கிறது. தமிழுக்கு புதுச்சேரி மகுடம் சூட்டியது என்று குறிப்பிட்டார்.

அத்துடன், ;தமிழகத்தில் இதுவரை தலைவிரித்தாடிய ஊழல் ஒழிக்கப்பட்டு, நேர்மையான ஆட்சியை விஜய் நடத்துகிறார்' என்றும், 'அவர் கொற்றம் வாழ்க'. 'இப்படியே கொற்றம் நீடிக்கும்' என்று வாழ்த்தியதோடு, 'திமுக பெருச்சாளி ஊழல்தான் செய்தது' என்று விமர்சித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்; கட்சியை விமர்சிப்பது தொடர்பாக கேட்கிறீர்கள். ஆனாலும், இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளிலும் நடப்பதுதான் இங்கும் நடக்கிறது என்றும், நேதாஜி காங்கிரஸை வளர்த்தார். அவர் பதவி பறிக்கப்பட்டது என்றும், அவரும் கட்சி ஆரம்பித்து விமர்சித்தார். மேலும் திலகர், வ.உ.சிதம்பரனார் ஆகியோரும் காங்கிரஸை வளர்த்து விமர்சித்துள்ளனர். இது வழக்கமான ஒன்றுதான என்று சுட்டிக்காட்டி பேசினார்.

அத்துடன், கரூர் விவகாரத்தில் மனசாட்சி இல்லாமல் ஓடி வந்தவர் என விஜய்யை விமர்சித்தீர்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''அன்று போகவில்லை எனச் சொன்னேன்; இன்று போகிறார் மனசாட்சி இருக்கிறது என்று சொல்கிறேன்'' என்று கூறினார்.

மேலும், திமுகவில் இருந்து மதிமுக விலகியதற்கு நிம்மதியாக இருக்கிறது என எம்.பி துரை வைகோ சொல்லி உள்ளது குறித்த கேள்விக்கு, ''லட்சக்கணக்கான தொண்டர்கள் எப்படி நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்களோ அந்த நிம்மதியைத் தான் திருச்சி எம்பி வெளிப்படுத்தியுள்ளார்'' எனத் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaiko says Vijay is running an honest government in Tamil Nadu after eradicating corruption


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->