பொன்முடி வழக்கு‌ || "2 வாரங்களுக்கு பின்" பட்டியலிட உச்ச நீதிமன்றம் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

உச்ச நீதிமன்றம் நீண்ட விடுமுறைக்கு பிறகு மீண்டும் கூடிய போது முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய தேவையில்லை எனவும், 

அதே வேளையில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எந்த தடையும் இல்லை எனவும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தால் பட்டியலிடப்பட்டு உடனே விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு பிறகு பட்டியலிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதன் மூலம் சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி சிறைக்கு செல்வது மேலும் 2 வாரங்களுக்கு தள்ளி போய் உள்ளது. உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கிய பிறகு அவர் சிறை செல்வாரா? அல்லது வழக்கில் இருந்து விடுதலை ஆவாரா? என்பது தெரிய வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sc order ponmudi appeal case list after 2weeks


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->