பெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.! உடன்பிறப்புகள் உற்சாகம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கடந்த மே இரண்டாம் தேதி அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று நாளை ஆட்சி அமைக்கிறது.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் நாளை தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. சமூக வலைதளங்கள் மூலமாகவும், மொபைல் அழைப்புகளிலும், நேரிலும் வந்து வாழ்த்துக்களை பலர் கூறுகின்றனர். 

அந்தவகையில் நேற்று நடிகரும், அரசியல்வாதியுமான கமலஹாசன் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தினார். தற்போது பெரியார் புகைப்படத்துடன் நடிகர் சத்யராஜ் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினும் இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sathyaraj makes Stalin Happy 


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal