இதான் சரியான நேரம்... சசிகலா ஆவேச பேட்டி.!
sasikala say about ops vs eps admk
இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தெரிவித்துள்ளதாவது,
"இன்று நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது, அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது என்று தான் தோன்றுகிறது. தலைமை பதவியை அடித்துப் பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது.

பணம் அதிகாரம் கொண்டு அடைந்த எந்த ஒரு பதவியும் நிலைக்காது. இது சட்டப்படியும் செல்லாது. தொண்டர்கள் நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்து விடக்கூடாது.
ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைதான் ஆதரிக்கிறார்கள். ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு, நிஜத்தை நிச்சயம் அடைவோம்.

பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை அறிவிக்க முடியாது. என்று இருக்கையில், எப்படி இந்த பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ள முடியும். இன்று நடந்த பொதுக்குழு செல்லாது". என்று செய்தியாளர்களிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.
English Summary
sasikala say about ops vs eps admk