ஓடும் வாகனத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்...! - நடந்தது என்ன...?
mentally ill woman thrown out moving vehicle What happened
கர்நாடகா, பாகல்கோட்டை மாவட்டம் – உனகுந்து தாலுகா பேவூர் கிராமத்தில் வசிக்கும் 40 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக அதிர்ச்சி உண்டாக்கும் சம்பவம் நடந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு திருமணமான அவர், பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கணவர் அறிந்து விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூடலமங்களா கிராஸ் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அந்த பெண் அரை நிர்வாண கோலத்தில் மயங்கி கிடந்தார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக உனகுந்து போலீசாருக்கு தகவல் வழங்கினர்.
விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு, முதன்மை சிகிச்சைக்காக உனகுந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பினர்.முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள், பாதுகாப்பிற்காக பாகல்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய பின்னர், தீவிர சிகிச்சை வழங்கினர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானுள்ளதாகவும், மர்ம நபர்கள் ஓடும் வாகனத்திலிருந்து கீழே தூக்கி வீசினார்கள்; இதனால் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறிந்தனர்.
இந்த சம்பவம் கேட்ட அவரது சகோதரர் அதிர்ச்சியடைந்து உனகுந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார், நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் அந்தப் பகுதிக்கு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
mentally ill woman thrown out moving vehicle What happened