சசிகலா விடுதலை ஆவதில் சிக்கல்.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட சசிகலா.!! - Seithipunal
Seithipunal


சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா நன்னடத்தை அடிப்படையில் விரைவில் வெளியே வருவார் என சசிகலா வட்டாரங்கள் கூறிவருகின்றனர். சமீபத்தில் சசிகலா ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக வர வாய்ப்புள்ளதாக பாஜக நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சாரி ட்விட்டரில் தெரிவித்தார். 

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஆகஸ்ட் 14ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா வெளியாக உள்ளதாக வெளியான தகவலை கர்நாடக சிறைத்துறை மறுத்துள்ளது. மேலும், அவர் எப்போது விடுதலை ஆவார் என்றும் தற்போது கூற முடியாது எனவும் சிறை துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், அடுத்த 30 நாட்களில் சிறையிலிருந்து விடுதலை அவர்களின் பட்டியலை கர்நாடக சிறைத் துறை வெளியிட்டுள்ளது. அதில் சசிகலா பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது ஒவ்வொரு மாதமும் இப்படி பட்டியல் வெளியிடுவது வழக்கமான ஒன்று.

சசிகலாவை பெருத்தவரை அவர் சிறையில் இருக்கும்போது விதிமீறல்களை மீறியதாக குற்றச்சாட்டு உள்ளது. சிறைத் துறை இயக்குனராக இருந்த ரூபா அளித்த புகாரின் விசாரணையில் தான் உள்ளது. அப்படி இருக்கும்போது சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது. மேலும் சசிகலாவின் தண்டனை காலம் முடிய இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. சசிகலா அபராதத் தொகை செலுத்தியது தொடர்பான தகவல் எதுவும் இல்லை. ஆகையால் அவர் இப்போது விடுதலையாவது என்பது கேள்விக்குறிதான்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala release issue


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal