டி.நகர் வீட்டில் நாள் குறிச்சாச்சு! இரண்டு பேரும் இணைவது உறுதி! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனை காரணமாக ஓ பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவர் பல்வேறு சூழ்நிலைகளில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்தி வருகிறார். சசிகலா மற்றும் தினகரனுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்திருந்தார். இருதரப்பினரும் இந்த முடிவில் தெளிவாக உள்ள நிலையில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் இருவருமே இதுவரை நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை. 

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்தியலிங்கமும் சசிகலாவும் திடீரென சந்தித்து பேசினார். திருமண நிகழ்ச்சியில் ஒன்றில் எதேர்ச்சியாக பார்த்துக் கொண்ட இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டு பேசினார்கள். இதன் காரணமாக ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் வரும் டிசம்பர் 5ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது நினைவு தினத்தில் சென்னையில் பேரணி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பன்னீர் செல்வத்துடன் இணைந்து பங்கேற்பது குறித்து தன் ஆதரவாளர்களுடன் டி.நகர் வீட்டில் சசிகலா நேற்று ஆலோசனை நடத்தியுள்ளாராம். இதில் பெரும்பாலானோர் ஓபிஎஸ் உடன் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வரும் டிசம்பர் 5ஆம் தேதி இருவரும் ஓரணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sasikala and OPS are likely to join the same team


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->