1978ம் ஆண்டு சரத்பவார் செய்தது இன்று அவருக்கே திரும்பியது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில், 41 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சிக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இழைத்த துரோகத்தை, அவரது அண்னன் மகனான அஜித் பவார் நினைவூட்டி இருக்கிறார்.

1978ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருந்தது. அப்போது தேர்தல் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. இதன் பிறகு, பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பின்னர், பிளவுபட்ட இரு காங்கிரஸ் பிரிவுகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தாலும், முதலமைச்சர் யார் என்ற  பதவிப் போட்டியால் பெரும் சிக்கல் எழுந்தது. அந்த சமயத்தில் 38 காங்கிரஸ் எம்எல்ஏக்களை சரத்பாவர் தன்பக்கம் இழுத்தார், இதையடுத்து ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து, சரத்பவார் 38ஆவது வயதில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார்.

41 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவார் இழைத்த துரோகத்தை, அவரது 78ஆவது வயதில், பாஜகவுடன் சேர்த்து ஆட்சி அமைத்து அஜித் பவார் நினைவூட்டி இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarath pawar did in 1978 returned to him today


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->