காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை: சச்சின் பைலட்..! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவருமான சச்சின் பைலட் இன்று சென்னை வந்துள்ளார். விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலட் தெரிவித்துள்ளதாவது:

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவத்தை விரும்புகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சியில பங்கு கேட்பதில் தவறு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு கேட்பதன் மூலம், அவர்களால் தமிழ்நாடு மக்களுக்கு உதவி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் எது நடந்தாலும், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழக அரசியலில் கால் பதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், தி.மு.க. அரசு சிறந்த பணியை செய்து வருகிறது. அவர்களின் செயல்பாட்டை மக்கள் விரும்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

மீண்டும் தமிழத்தில், தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைத்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் எம்.பி.யும், ஆட்சியில் அதிகாரம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sachin Pilot says there is nothing wrong in the Congress party demanding a share in power


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->