ஆர்.எஸ்.எஸ், பாஜக அழித்துவிட்டது! நாட்டின் உற்பத்தி சக்திகள் மரியாதை பெற வேண்டும் என்பதுதான் என் எண்ணம்! - ராகுல் காந்தி
RSS BJP destroyed intention that productive forces country should get respect Rahul Gandhi
இன்று நடைபெற்ற ஓபிசி மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ''ராகுல் காந்தி'' அவர்கள் பங்கேற்று உரையாடினார்.

ராகுல் காந்தி:
அப்போது ராகுல் காந்தி தெரிவித்ததாவது," நாட்டின் உற்பத்தி சக்தியான ஓ.பி.சியின் வரலாற்றை வேண்டுமென்றே ஆர்எஸ்எஸ், பாஜக அழித்து விட்டன. நாம் முன்னதாகவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாமல் போனது காங்கிரசின் தவறு அல்ல.
என்னுடைய தவறு. தற்போது அதை சரி செய்துள்ளேன். ஓபிசிக்கள், தலித்கள், பழங்குடியினர் நாட்டின் உற்பத்தி சக்திகள். ஆனால், அவர்கள் அதற்கான பலனை பெறவில்லை.
ஓ.பி.சி.க்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அளவுக்கு என்றால் பாதுகாக்க முடியவில்லை. என்னுடைய எண்ணம் நாட்டின் உற்பத்தி சக்திகள் மரியாதை பெற வேண்டும் என்பதுதான்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
RSS BJP destroyed intention that productive forces country should get respect Rahul Gandhi